கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட பிரிவு, நேரு இளையோர் மையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்தியா சுந்திர ஓட்டம் 2.0-ஐ நேற்று நடத்தியது. ஆட்சியர் பெருந்திட வளாகத்தில் தொடங்கி ஏகேடி பள்ளி வளாகம் வரை நடைபெற்றது. இந்த ஓட்டத்தில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாண வர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து, தானும் குடும்பத்துடன் ஓட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் இதுதொடர்பாக பேசிய ஆட்சியர், “நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு இளையோர் மையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை ஒருங்கிணைந்து ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டத்தை நடத்தி யுள்ளது.

மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ஓட்டம், உடற்பயிற்சி போன்றநடவடிக்கைகளில் ஈடுபடும் போது உடல்பருமன், சோம்பல், மனஅழுத்தம், கவலை போன்ற வற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கி யத்துடன் வாழலாம்.

நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்காக ஒதுக்கீடு செய்யுங்கள்’‘ என்றார்.

ஓட்டத்தில் பங்கேற்று, 3 இடங் களைப் பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட் சுமி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நேரு இளையோர் மைய உறுப்பினர்கள், நாட்டு நலத்திட்ட மாணவர்கள் பங் கேற்றனர்.

விழுப்புரத்தில் சுதந்திர ஓட்டம்

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 150-க்கும் மேற் பட்டோர் பங்கேற்ற ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டத்தை எஸ்பி நாதா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

நேரு யுவகேந்திரா இளை ஞர்கள், காவல்துறையினர், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். ஓட்டப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களும், பங்கேற்பாளர் களுக்கு சான்றிதழ்களையும் எஸ்பி வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், நக ராட்சி ஆணையர் சுரேந்திரஷா, மாவட்ட விளை யாட்டு நல அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE