பராமரிப்பு இல்லாத கண்காணிப்பு கேமராக்கள் - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடரும் திருட்டு : பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

பராமரிப்பு இல்லாத கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகளால் மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனை ஒரே வளாகத்தில் இல்லாமல், பனகல் சாலையில் வெவ்வெறு இடங்களில் அமைந்து ள்ளது. கோரிப்பாளையத்தில் பழைய மருத்துவமனை கட்டி டமும், அண்ணா பஸ்நிலையம் அருகே தலைக்காய அவசர சிகிச் சைப்பிரிவு கட்டிடமும், அரசு மருத் துவக் கல்லூரி மைதானத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையும் உள்ளன. இந்த மூன்று கட்டிடங்களையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பது அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்துக்கு சவாலானதாக இருக்கிறது.இந் நிலையில், 3 கட்டிடங்களிலும் முக்கிய வார்டு பகுதிகளில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப் பட்டு 24 மணி நேரமும் டீன், மருத்துவமனை காவல்நிலயை போலீஸார் கண்காணிப்பதற்கு ஏற் பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த கண்காணிப்பு கேமராக்கள் பல தற்போது செயல்படவில்லை.

கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும் போலீஸாரை, மாற்றுப்பணிக்கு மாநகர காவல் துறை அனுப்பிவிடுகிறது.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், பார் வையாளர்களின் உடைமைகள் அடிக்கடி திருடுபோகிந்றன.

சமீபத்தில் இரண்டாவது கரோனா அலை தீவிரமாக இருந் தபோது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரெம்டெசிவிர் மருந்துகள் திருடுபோனது.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவமனையில் இருப்பு வைக்கப் பட்டிருந்த ரூ.7.5 லட்சம் மதிப் புள்ள கணினி மற்றும் மருத்துவ உபகரணங்கள் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘கரோனா தொற்று பரவல் அதிகரித்தபோது அனைவரும் அதற்கான சிகிச்சை அளிப்பதில் கவனமாக இருந்துவிட்டோம். அப்போதுதான் இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் அந்த நிகழ்வுகள் பதிவாகி நீண்ட காலமாகிவிட்டதால் அந்த காட்சிகளை சேகரிப்பது சிரமம். அதனால் போலீஸில் புகார் செய்துள்ளோம்" என்று கூறினார்.

மதுரை கே.கே. நகர் சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறு கையில், ‘‘மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 5 ஆண் டுகளுக்கு முன்பு குழந் தைகள் திருடப்படும் சம்பவங்கள் நடந்தன. உயர் நீதிமன்ற நீதிபதி நேரடியாக ஆய்வு செய்து மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த அறி வுறுத்தினார். அதன் பிறகு குழந்தைகள் வார்டு பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டது. இதையடுத்து குழந்தை திருட்டு நடக்கவில்லை.

ஆனால், மற்ற மருத்துவப் பிரிவுகளில் கண்காணிப்பு பெயரளவுக்கே உள்ளது. ஒவ் வொரு வார்டுக்கு நுழைவு வாயி லிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை வைத்து, அவை 24 மணிநேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் என் னென்ன மருத்துவக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன? அதன் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து சிறப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரும் சீருடை, அடையாள அட்டை அணிந்திருப்பதை கட் டாயமாக்க வேண்டும். அனை வரையும் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்