மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,150 கனஅடியாக சரிவு :

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 10,150 கனஅடியாக சரிந்துள்ளது.

காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் மழை அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தற்போது, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 11,019 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை 10,150 கனஅடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி, கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் வரத்தை காட்டிலும், நீர் திறப்பு குறைவாக இருப்பதால், அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் அணை நீர் மட்டம் 75.76 அடியாக இருந்தது, நேற்று காலை 76.18 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 38.25 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்