திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட் டங்களில் இன்று(செப்.12) 5,696 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறு கின்றன. இவற்றில் 6,04,864 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று (செப்.12) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 631 சிறப்பு முகாம்கள் நடத்தி 1,37,500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் 27,600 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 400 மையங்களில் 40,000 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 750 மையங்களில் 78,000 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 540 மையங்களில் 50,000 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,550 மையங்களில் 1,28,564 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 633 மையங்களில் 63,200 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 500 மையங்களில் 30,000 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 499 மையங்களில் 50,000 பேருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தவணை, 2-ம் தவணை தடுப்பூசிகளை பொதுமக்கள் இம் முகாம்களில் செலுத்திக் கொள்ளலாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
சில்வர் தட்டு இலவசம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் 43 இடங்களில் சுமார் 4,300 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில், தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு தலா ஒரு எவர்சில்வர் தட்டு வழங்கப்பட உள்ளது என வட்டாட்சியர் புவியரசன் தெரிவித்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago