வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி - கன்னியாகுமரியில் அக்.2-ம் தேதி உண்ணாவிரதம் : தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு

By செய்திப்பிரிவு

மத்திய அரசு 3 வேளாண் சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தி அக்.2-ம் தேதி கன்னியாகுமரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அக்.2-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லி வரை பிரச்சார பயணத்தை மேற்கொள்வது என சென்னையில் ஆக.20-ம் தேதி தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக விவாதிக்க தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடை பெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப் பாளர் வழக்கறிஞர் டி.குருசாமி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, காவிரி டெல்டா பாசன விவசாயி கள் சங்கத் தலைவர் கே.வி.இளங் கீரன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

அப்போது, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக் குழுவின் அனுமதி யில்லாமல் நாம் பிரச்சார பயணம் செல்வது சரியானதல்ல. டெல்லி போராட்டக்களத்திலிருந்து வெளி யேறிய வி.எம்.சிங் மத்திய அரசுக்கு அளித்துள்ள கடிதத்தில் ராஜேந்திர சிங்கும் கையொப்பமிட்டுள்ளார். எனவே, போராட்டக் குழுவின் ஒப்புதல் பெற தமிழக அளவில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட சில விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், வழக்கறிஞர் குருசாமி பேசும்போது, ‘‘ராஜேந்திர சிங் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண் மையில்லை. நாம் முடிவு செய்த படி பிரச்சாரப் பயணத்தை அக்.2-ம் தேதி தொடங்கலாம்’’ என்றார்.

இதனால், கூட்டத்தில் சலச லப்பு, வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத் தில், அக்.2-ம் தேதி கன்னியா குமரியில் காந்தி மண்டபம் அருகே விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வது எனவும், அங்கு பிரச்சாரப் பயணம் குறித்து முடிவு செய்யலாம் எனவும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் தலை வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங் கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்