திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது. மதுரை ஆதீனம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பாரதி பயின்ற பள்ளி என்ற பெருமைமிக்க இப்பள்ளியில், பாரதியின் நூற்றாண்டு விழா பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ல ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பரிசுகளை வழங்கினார்.
இளையபாரதி என்ற ஆவணப்படத்தை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்டார். பள்ளி நிர்வாக குழு தலைவர் எஸ்.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் எம்.செல்லையா வரவேற்றார். பொருளாளர் பி.டி.சிதம்பரம், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இரா. சுரேஷ், தளவாய் ஆர். திருமலையப்பன், மதிதா இந்துக் கல்லூரி முதல்வர் ஏ.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் சி. உலகநாதன் நன்றி கூறினார். பாரதி நூற்றாண்டு நினைவையொட்டி இப்பள்ளி சார்பில் பெண்கள் பூப்பந்தாட்ட போட்டி, வெளிநாடுவாழ் தமிழ் அறிஞர்கள் பங்கேற்ற 30 இணையவழி கருத்தரங்குகள், சீவலப்பேரி முதல் பள்ளி வரையில் தொடர் ஜோதி ஓட்டம், பேட்டை மதிதா இந்துக் கல்லூரி முதல் பள்ளி வரையில் மினி மராத்தான், பாளையங்கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் பாடல்களை பாடுதல், 100 அடி துணியில் பாரதி, வ.உ.சி. படங்களை வரைதல், மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள், ஓவியக் கண்காட்சி போன்றவை நடத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago