கூடுதல் விலைக்கு உரம் விற்றால் விற்பனையாளரின் உரிமம் ரத்து : மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமமும் ரத்து செய்யப்படும், என நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அசோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனையாளர்கள் விற்பனை உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே உரம் கொள்முதல் செய்ய வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விற்பனையின்போது விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும்.

இருப்பிலுள்ள உர விவரங்கள், விலை விவரங்களை விவசாயிகளுக்கு தெரியும் வகையில் தகவல் பலகை பராமரிக்க வேண்டும்.

உரம் கொள்முதல் பட்டியல், இருப்பு பதிவேடுகள் சரியாக பராமரிக்க வேண்டும். மானிய விலை உரங்கள், விற்பனை முனையக்கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் கொண்டு விற்பனை செய்ய வேண்டும். விவசாயி அல்லாதோருக்கு உரம் விற்பனை செய்யக் கூடாது.

ஆய்வின்போது உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ, அதிக விலைக்கு விற்றாலோ உரக்கட்டுப் பாட்டு ஆணையின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்