கடலூர் மாவட்டத்தில் 909 மையங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் 909 மையங்களில் நாளை மறுநாள் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலை மையில் அனைத்துத்துறை அலு வலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்த விவரம்:

மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விடுபட்ட தகுதியானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து ஊராட் சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் 909 தடுப்பூசி மையங் கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இம்முகாமில் 18 வயதிற்குமேற்பட்ட அனைவருக்கும் தடுப் பூசி வழங்குவதோடு, கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், இணை நோய் கண்டவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோர் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண் டும்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மது, மாமிசம் உண் பவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் எவ்வித உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப் பில்லை.

அனைவரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும், தடுப்பூசிமுகாம்களை கண்காணிக்க அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், சார் ஆட்சியர்கள், அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்