சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி சாலை, ஏரிக்கரை பகுதியில் 17 வயது சிறுமிகள் இருவருக்கு நேற்று வெவ்வேறு இடங்களில் திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த அலுவலர்கள் திவ்யா, முருகானந்தம், சாரதா மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி, தலைமைக் காவலர் பார்வதி ஆகியோர் வடக்கு மாதவி சாலை, ஏரிக்கரை பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சென்று, அங்கு 17 வயதான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்திருந்த சிறுமிகளின் தந்தைகளிடமிருந்து இரண்டு சிறுமிகளையும் மீட்டனர். பின்னர், சிறுமிகள் இருவரையும் பெரம்பலூரில் உள்ள சேவை மையத்தில் தங்கவைத்தனர். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்