டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே டேங்கர் லாரிகள் மாநகர எல்லைக்குள் அனுமதிக்கப்படும் என்றும், மீறினால் ரூ. 600 அபராதம் விதிக்கப்படும் எனவும், மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு திருநெல் வேலியிலிருந்து இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் 165 டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப் பட்டன.

திருநெல்வேலி அருகே தச்சநல்லூர் பகுதியில் திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு சொந்தமான கொள்கலன் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இங்கிருந்துதான் நியாயவிலை கடைகளுக்கு மண்ணெண்ணையும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து 165 லாரி களில் தென் மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லப்படும். மாநகர காவல் துறையின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தச்ச நல்லூரில் உள்ள பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகளின் முன் லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்