வணிகர்கள், தொழிலாளர்கள் - 100% தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் : தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுரை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட் டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் 12- ம் தேதி நடைபெற உள்ளது. 973 சிறப்பு முகாம்கள் மூலமாக 1.24 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அனைத்து வணிகர் சங்க மற்றும் உணவக உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணா மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கடை உரிமையாளர்கள், வணிகர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் உட்பட அனைவரும் தவறாமல் 100 சதவீதம் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். வணிகர்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, இப்பணியை வெற்றிகரமாக செயல்படுத்திட முடியும்.

மக்கள் அனைவரும் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மேற்கொள்ளப்படும், மாபெரும் உன்னத முயற்சியில், மாவட்ட நிர்வாகத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 12-ம் தேதி 500 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளதாக ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE