சோளிங்கர் வட்டாரத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10,265 பேர் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் சோளிங்கர் வட்டாரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை செய்தல், தேவைப் படும் மருந்துகள் வழங்குதல், இயன்முறை மருத்துவ சிகிச்சை, வலி நிவாரணம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சோளிங்கர் வட்டாரத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் பதிவு செய்யப் பட்டவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி, 4,649 ரத்த அழுத்த நோயாளிகள், 4,012 சர்க்கரை நோயாளிகள், மேற் கண்ட இரண்டு நோயால் பாதிக்கப்பட்ட 1,441 பேருக்கு சுகாதார தன்னார்வலர்கள் மூலம் நேரடி யாக வீடுகளுக்கே சென்றுமாத்திரைகள் வழங்கப்படுகின் றன.
அதேபோல், பக்கவாதம், மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள், நீண்ட நாள் முடக்கு வாதம், நடக்க இயலாதோர், எலும்பு முறிவு, நுரையீரல் பாதிப்புள்ள 132 பேருக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுநீரக உறுப்புகள் பாதிப் படைந்த 5 பேருக்கு மாதந்தோறும் சிறுநீர் பைகளை வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் சோளிங்கர் வட்டாரத்தில் மட்டும் 10,265 பேர் பயனடைந்துள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago