பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் உரக்கடைகளில் நேற்று முன்தினம் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதில், துங்கபுரத்தில் உள்ள ஒரு உரக்கடையில் உரிய அனுமதிபெறாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த 6 டன் உரங்களை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டு, அந்த உரக்கடையின் உரிமையாளருக்கு உரம் விற்பனை உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதேபோல, உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி மேலும் 11 உரக்கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அங்கிருந்த அங்கீகாரம் இல்லாத உர நிறுவனங்களின் 192.05 டன் உரங்களை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago