பாலியல் குற்றங்களைத் தடுக்க மாணவர்களிடையே விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் காவல்துறை சார்பில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்கள் தனித்தனியாக நேற்று நடத்தப்பட்டன.

நிகழ்வுக்கு குறிஞ்சிப்பாடி காவல்நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரிர்கள் கனகசபை, உதவி ஆய்வாளர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பங்கேற்ற மாணவர் களிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.

தொடர்ந்து பாலியல் துன்புறத்தலுக்கு எதிரான போக்சோ சட்டம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

மாணவிகள் பேருந்தில் வரும் போது, பேருந்து நிறுத்தம் மற்றும் பள்ளிக்கு நடந்து வரும் வழியில் யாராவது கிண்டல் செய்தாலோ, தவறாக நடக்க முயற்சி செய்தாலோ உடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், நகரில் 60 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள்பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. உடன் தகவல் தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு முகாமின் இறுதியில் முதுகலை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்