உள்ளாட்சி அமைப்புகளில் - பெண் நிர்வாகிகளின் கணவர்கள் தலையிட்டால் நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

உள்ளாட்சி அமைப்புகளில் பெண் நிர்வாகிகளின் கணவர்கள் தலை யிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலு வலர்கள் நடவடிக்கை எடுப்பர் என ஊராட்சிகளின் இயக்குநர் எச்சரித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள், ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கின்றனர். இதில் பெரும்பாலும் அவர்களது கணவர்களின் தலையீடு உள்ளது. உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ள பெண்களின் நிர்வாகங்களில் தலையிடுவது, பெண்களின் கையெழுத்தை அவர்களது கண வர்களே போடுவது உள்ளிட்ட பல்வேறு தலையீடுகள் உள்ளன.

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் பொறுப் பாளர்களாக உள்ள பதவிகளில் கணவர் தலையிடக்கூடாது என அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊராட்சி மன்றங்களில் கணவர்கள் தலையிட்டால் மண்டலத் துணை வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவும், ஊராட்சி ஒன்றியப் பதவிகளில் கணவர்கள் தலையிட்டால் வட்டார வளர்ச்சி அலுவலரும், மாவட்ட ஊராட்சிப் பதவிகளில் தலையிட்டால் மாவட்ட ஊராட்சி செயலாளரும் நடவடிக்கை எடுப்பர் என ஊராட்சிகளின் இயக்குநர் பிரவீன் பி.நாயர் தெரிவித்து, ஊராட்சி அலுவலர்களுக்கு கடிதம் எழுதி யுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்