தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம்- முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநகர் மாவட்டச் செயலாளர் பி.தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.செல்வராஜ், பொருளாளர் எம்.முருகேசன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், முடி திருத்தும் கடைகள் நடத்த பெரு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது. முடி திருத்தவோர் நல வாரியத்தில் முடி திருத்தும் தொழிலாளரை உறுப்பினராக நியமிக்க வேண்டும். கோயில்களில் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளதால், கோயில் நிர்வாகமே முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம், சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுஅளித்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடித்திருத்தும் தொழிலாளர் நல சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சுரேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago