சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் த.ராஜகோபாலன் தலைமை வகித்தார்.

மாநிலச் செயலாளர் கு.சக்தி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரங்கசாமி, ஒன்றியச் செயலாளர் கு.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன்கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணி ஓய்வு நாளில் வழங்கப்படும் ஒட்டு மொத்த தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோன்று, மாவட்டத்தில் 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருமானூர் ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலாளர் லதா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் குமரிஅனந்தன் உட்பட பலர் பேசினர்.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் கே.அய்யப்பன், நகரத் தலைவர் பொன்.ஹேமா ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.ரவிச்சந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர். மாவட்டத்தில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்