பாபநாசத்தில் 9 மிமீ மழை :

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை நிலவரப்படி 9 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல மணிமுத்தாறு அணையில் 2.2 மிமீ, சேர்வலாறு அணையில் 1 மிமீ மழை பெய்திருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 86.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 889 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,204 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 5 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

குண்டாறு அணையில் 7 மி.மீ. மழை

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொ ட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 7 மி.மீ., அடவிநயினார் அணையில் 5 மி.மீ., தென்காசியில் 2.60 மி.மீ., செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது.

நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான வெயிலும் இருந்தது. குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. கடனாநதி அணை நீர்மட்டம் 67.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 66.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 60.04 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 123.50 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்