திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட ரூ.7.60 லட்சம் மதிப்பிலான 51 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. செல்போன்களுடன் மரக்கன்றுகளையும் வழங்கிய காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.40 லட்சம் மதிப்பிலான 315 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 133 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகள் தொடர்பாக 392 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 113 பேர் ரவுடிகள். விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி வீட்டுக்கு முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வீட்டுக்குமுன் ஒன்றரை அடி சிலை வைத்து வழிபாடு செய்யலாம். அதைவிட அதிக உயரமுள்ள சிலைகளை வைக்க அனுமதியில்லை.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு விவரங்கள் கேட்டால் தயவுசெய்து கொடுக்க வேண்டாம். இணையதளம் மூலம் பொருட்களை வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும். விலை மலிவாக உள்ளது என நம்பகத்தன்மை இல்லாத இணையதளத்தை பயன்படுத்த வேண்டாம். சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத நபருடன் வீடியோ கால் செய்ய வேண்டாம். இதுதொடர்பாக cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago