முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகை பெறுவதற்காக மனுக் களை பெறும் சிறப்பு முகாம் தி.மலை மாவட்டத்தில் இன்று (8-ம் தேதி) முதல் தொடங்குகிறது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரைபடி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவித் தொகை வழங்குவதற்காக மனுக்களை பெறும் சிறப்பு முகாம், 8-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. ஒவ்வொரு புதன்கிழமையிலும் முகாம் நடைபெறும்.
முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகைகள், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவி, கல்வி உதவித் தொகை பெறுவதற்கான மனுக்கள் பெறப்படும். வாரந்தோறும் உள்வட்டம் வாரியாக சிறப்பு முகாம் நடை பெறும். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாம்கள்
தி.மலை வட்டம் தி.மலை வடக்கு உள்வட்டத்துக்கு வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிலும், செங்கம் வட்டம் இறையூர் உள் வட்டத்துக்கு அங்கன்வாடி மையத்திலும், கீழ்பென்னாத்தூர் வட்டம் சோமாசிபாடி உள்வட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், தண்டராம்பட்டு வட்டம் தானிப்பாடி உள்வட்டத்துக்கு வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிலும், ஆரணி வட்டம் கண்ண மங்கலம் உள்வட் டத்துக்கு அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், போளூர் வட்டம் மொடையூர் உள்வட்டத்துக்கு வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிலும், கலசப்பாக்கம் வட்டம் கலசப்பாக்கம் உள்வட்டத்துக்கு கலசப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிலும், ஜமுனாமரத்தூர் வட்டம் ஜமுனாமரத்தூர் உள்வட்டத் துக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.மேலும், செய்யாறு வட்டம் செய்யாறு நகர் உள்வட்டத்துக்கு பரிதிபுரம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிலும், சேத்துப்பட்டு வட்டம் கொழப்பலூர் உள்வட்டத்துக்கு வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிலும், வந்தவாசி வட்டம் ஓசூர் உள்வட்டத்துக்கு ஓசூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், வெம்பாக்கம் வட்டம் பெருங்காட்டூர் உள்வட்டத்துக்கு வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் உதவித் தொகைக் கான மனுக்களை பெறும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago