சாலை விபத்தில் உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.37.90 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (23). கோவை மாவட்டத்தில் மின் கணக்கீட்டா ளராகப் பணியாற்றி வந்தார். 16.5.2019-ல் சூலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகன விபத் தில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே, சாமிநாதனின் மனைவி கவுசல்யா(21) மற்றும் அவ ரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி விருதுநகரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சட்டப் பணி கள் ஆணைக்குழு சார்பில் சார்பு நீதி மன்ற நீதிபதி சதீஷ் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சாமிநாதன் குடும்பத்தினரின் இழப்பீடு வழக்கு விசாரணைக்கு வந்தது. சாமிநாதனின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் ரூபன் ராஜ், ஜான்கென்னடி, எஸ்.பி.ஐ. ஜென ரல் இன்சூரன்ஸ் நிறுவன அலு வலர்கள் வந்திருந்தனர்.
விசாரணையின் இறுதியில், சாமி நாதன் குடும்பத்தினருக்கு ரூ.37.90 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை காப்பீடு நிறுவனத்தினரிடமிருந்து பெற்று சார்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago