சிவகங்கை நறுமண பூங்கா அனுமதி கிடைப்பதில் இழுபறி : 8 ஆண்டுகளாக அலைக்கழித்து வரும் ஊரக நகரமைப்பு துறை

By செய்திப்பிரிவு

சிவகங்கை நறுமணப் பூங்காவுக்கு 8 ஆண்டுகளாக அனுமதி தர ஊரக நகரமைப்புத் துறை மறுத்து வரு வதாக நறுமணப் பூங்கா அதிகாரி போஸ் வேதனை தெரிவித்தார்.

மத்திய தொழில் வர்த்தக அமைச் சகம் சார்பில் சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் 73 ஏக்கரில் மிளகாய், மஞ்சள், வாசனைப் பொருட்களுக்கான நறுமணப் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் 23 ஏக்கரில் ரூ.28 கோடியில் பல ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள், தட்பவெப்ப நிலைக் கட்டுப்பாட்டு அறை, சுத்தம், தரம் பிரிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டன.

மீதியுள்ள இடத்தில் கிடங் குகளுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் அமைக்க தலா ஒரு ஏக்கர் வீதம் 30 மனையிடங்கள் உருவாக்கப் பட்டன.

இந்தப் பூங்கா மூலம் நேரடி யாகவும், மறைமுகமாகவும் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், ரூ.1,500 கோடிக்கு வர்த்தகம் நடக்கும் எனவும், நாட்டுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நகர் ஊரமைப்புத் துறையிடம் அனுமதி பெறாமலேயே இந்தப் பூங்காவை 2013-ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். அதன்பிறகு பல போராட் டங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு மனையிடங்களுக்கு நகர் ஊரமைப்பு இயக்குநரகம் அனுமதி வழங்கியது. ஆனால், கட்டிடங் களுக்கு அனுமதி தரவில்லை. தொடர்ந்து நறுமணப் பூங்கா அதிகாரிகள் அலைந்தும் அனுமதி கிடைக்காததால் அதிருப்தி தெரி வித்துள்ளனர்.

இதனால் மாவட்ட அமைச் சரான கே.ஆர்.பெரியகருப்பனும், மாவட்ட ஆட்சியர் பி.மது சூதன் ரெட்டியும் தலையிட்டு நறு மணப் பூங்காவுக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சிவகங்கை நறு மண பூங்கா பண்ணை மேலாளர் போஸ் கூறியதாவது: நறுமணப் பூங்காவை குத்தகை எடுக்க 5 நிறுவனங்கள் தயாராக உள்ளன. அதேபோல் மனையிடங்களில் கிடங்குகளை அமைக்க 15-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதனால், இந்தாண்டு டிசம் பருக்குள் பூங்காவை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், 8 ஆண்டுகளாக அலைந் தும் ஏதாவது குறைகளைச் சொல்லி ஊரக நகரமைப்பு அதிகாரிகள் பூங்கா வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு அனுமதி தர மறுத்து வருகின்றனர். இதனால், பூங்காவை திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்