புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் - ஈரோட்டில் வெறிச்சோடிய திரையரங்குகள் :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு, 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட அளவில் 50 திரையரங்குகளும், நகர்பகுதியில் 11 திரையரங்குகளும் உள்ளன. நகர் பகுதியில் தற்போது நான்கு திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில திரைப்படங்களே திரையிடப்பட்டுள்ளன.

இப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால், ஒவ்வொரு காட்சிக்கும் மிகக்குறைவான ரசிகர்களே வருகின்றனர்.

சில நேரங்களில் 10-க்கும் குறைவான ரசிகர்கள் வந்ததால், காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஈரோடு திரையரங்க உரிமையாளர்கள் கூறும்போது, அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளைத் திறந்துள்ளோம். விநாயகர் சதுர்த்தியையொட்டி, விஜய் சேதுபதி நடித்த லாபம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாகக் கொண்ட தலைவி போன்ற திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இதனால், அப்போது முதல் திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் அதிகரிக்கும். அப்போது கூடுதல் திரையரங்குகளும் திறக்கப்படும் என நம்புகிறோம், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்