சம்பா சாகுபடியைத் தொடங்க வசதியாக - 17 வாய்க்கால்களில் தண்ணீரைமுழு அளவுக்கு திறக்கக் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்க துணைத் தலைவர் கவண்டம்பட்டி ஆர்.சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

நீர்வளத்துறையின் திருச்சி ஆற்றுப் பாசன கோட்டத்தின் கீழ்காவிரியின் வடகரையில் பிரியும் காட்டுப்புத்தூர் வாய்க்கால், வடகரை வாய்க்கால், முக்கொம்பு வடபுறம் உள்ள அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்கால், ரங்கம் நாட்டு வாய்க்கால், இதேபோன்று காவிரியின் தென் கரையில் பிரியும் கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால், தென்கரை பாசன வாய்க்கால், புது அய்யன் வாய்க்கால், ராமவாத்தலை வாய்க்கால், புதுவாத்தலை வாய்க்கால், கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்கால், நெரூர் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புதுகட்டளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் ஆகிய 17 வாய்க்கால்கள் மூலம் மொத்தம் 1,72,123 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள விநாடிக்கு 4,281 கன அடி நீர் தேவை.

எனவே, நிகழாண்டில் இந்த நிலங்களில் சம்பா நெல் சாகுபடியை மேற்கொள்ள வசதியாக 17 வாய்க்கால்களில் முழு அளவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்