புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கோட்டாட்சியர், 12 வட்டாட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு வருவாய்த் துறை அலுவல கங்களில் அலுவலர்கள் நிலையான காலிப்பணியிடம் அதிகமாக இருந் ததால் நிர்வாக சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2019-ல் 36 முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் தற்காலிக துணை வட்டாட்சியர்களாக ஆட்சியர் மூலம் நியமனம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. அதன்பிறகு, வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த பட்டியல் ரத்து செய்யப்பட்டு, அதே ஆண்டில் புதிய பட்டியலும் வெளியிடப்பட்டது. இதற்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கிடையில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த் துறை அலுவலர்களிடையே இருவேறு கருத்து நிலவியதால், இணக்கமற்ற சூழல் நிலவியது.
இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் 45 வருவாய் ஆய்வாளர்களை துணை வட்டாட்சியர்களாக நியமனம் செய்து ஆட்சியர் கவிதா ராமு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அரசாணை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் வழிகாட்டுதல்படியும், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றியும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், இதை எதிர்த்து முறையீடு இருக்காது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago