அடவிநயினார் அணையில் 20 மி.மீ. மழை: குற்றாலம் அருவிகள் ஆர்ப்பரிப்பு :

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 20 மி.மீ., குண்டாறு அணையில் 5 மி.மீ. மழை பதிவானது. செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கரோனாபரவல் காரணமாக அருவிகளில்குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் நீக்கப்படாததால், குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.

நேற்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது.

கடனாநதி அணை நீர்மட்டம் 68 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 66.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 60.37அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 123.50 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

நாகர்கோவில்

குமரியில் கடும் வெயில் அடித்து வரும் நிலையில் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பொழிந்து வருகிறது.

அதிகபட்சமாக நேற்று பேச்சிப்பாறையில் 25 மிமீ மழை பெய்திருந்தது. பூதப்பாண்டியில் 7 மிமீ, சிற்றாறு ஒன்றில் 22, களியலில் 10, கன்னிமாரில் 7, குழித்துறையில் 9, பெருஞ்சாணியில் 11, புத்தன்அணையில் 12, சிவலோகத்தில் 9, சுருளகோட்டில் 13, பாலமோரில் 17, மாம்பழத்துறையாறில் 11, முள்ளங்கினாவிளையின் 16 மிமீ மழை பதிவானது.

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 666 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 45.26 அடியாக உள்ளது. 433 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி நீர்மட்டம் 62.77 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு 271 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொய்கை அணையில் 25 அடியும், மாம்பழத்துறையாறில் 43 அடியும், முக்கடல் அணையில் 22 அடியும் தண்ணீர் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE