நெல்லையில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

திருநெல்வேலியில் நவோதயா பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமாகாதலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு பாளையங்கோட்டையில் நவோதயா பள்ளி திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை.அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவிலை உயர்வு தற்காலிகமானது என்றாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலக பொருளாதாரத்தின் நிலையை பொருத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலிலும் தற்போது உள்ள கூட்டணி தொடரும். மத்தியில் பாஜகவுடனும், மாநிலத்தில் அதிமுகவுடனும் எங்களது கூட்டணி உள்ளது. கோடநாடு விவகாரத்தில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படக்கூடாது. பள்ளி கல்லூரிகளில் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை செய்யவேண்டும். பள்ளி கல்லூரிகளில் 85 சதவீத கல்விக்கட்டணம் தொடர வேண்டும். அதை மூன்று தவணையாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சியில் மின் கம்பிகளை பூமிக்கு அடியில் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்