வள்ளியூர் வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா :

By செய்திப்பிரிவு

வள்ளியூர் வியாபாரிகள் சங்கத்தின் 88-வது மகாசபை கூட்டமும், ஆண்டுவிழாவும் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.டி.பி.சின்னதுரை தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் என்.சங்கரன் வரவு,செலவு அறிக்கை வாசித்தார்.தணிக்கை அறிக்கையை திருமலைநம்பி, எம்.நடேசன் ஆகியோர் வாசித்தனர்.

வியாபாரிகளின் குழந்தைகளில் பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற சி.சுவித்ரவேணிக்கும், 2-வது மதிப்பெண் பெற்ற எஸ்.மீனாட்சிக்கும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற எம்.பூமிநாதன், 2-ம் மதிப்பெண் பெற்ற ஜி.ஜெய ஆகியோருக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

வணிகர்கள் நலவாரியஉதவித்தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தவேண்டும். வள்ளியூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும்.வள்ளியூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்