தி.மலை அடுத்த கீழ்கச்சிராப் பட்டு காட்டுக்கொல்லை பகுதி யில் குடிநீர், சாலை மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மனுக் கொடுக்க பொதுமக்கள் வருவதால், ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்டி வைக்கப்பட்டு, அதன் மூலமாக மக்களிடம் இருந்து மனுக்களை மாவட்ட நிர்வாகம் பெற்று வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனுக்களை கொடுக்க பொதுமக்கள் வழக்கம்போல் திரண்டு மனு அளித்தனர்.
தி.மலை அடுத்த கீழ்கச் சிராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை, காவல்துறையினர் எச்சரித்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காவல் துறையினரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பெண்கள் கூறும்போது, “கீழ்கச்சிராப்பட்டு காட்டுக் கொல்லை பகுதியில் 20 வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. குடிநீருக்காக 2 கி.மீ., தொலைவு சென்று வருகிறோம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ், தனி நபர் குடிநீர் குழாய் இணைக் கப்படவில்லை.
மேலும், சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதி இல்லை. எங்கள் பகுதிக்கு அடிப்படை தேவையான குடிநீர், சாலை மற்றும் மின்விளக்கு வசதியை செய்து கொடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
கல்விக்கு உதவுங்கள்...
திருவண்ணாமலை அடுத்த வாசுதேவன்பட்டு கிராமத்தில் பெற்றோரை இழந்து வாழ்ந்து வரும் ராகுல்(19), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.பின்னர் அவர் கூறும்போது, “எனது தந்தை முருகன், தாய் வள்ளியம்மாள் ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது, தி.மலை ஆட்சியர் அலுவலகம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்துவிட்டனர். இதனால், ஊசாம்பாடியில் வசித்து வந்த நானும், எனது தம்பி ராஜேஷ் (வயது 17, பிளஸ் 1 படிக்கிறார்), தங்கை ரஞ்சிதா (வயது 14, 9-ம் வகுப்பு படிக்கிறார்) ஆகியோர், வாசுதேவன்பட்டு கிராமத்தில் உள்ள தாத்தா பாண்டுரங்கன் வீட்டுக்கு சென்றுவிட்டோம்.
கூலி வேலை செய்து வந்த எனது தாத்தாவுக்கு வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், வேலைக்கு செல்ல முடிய வில்லை. நான், பிளஸ் 2 படித்துள்ளேன். விபத்தில் எனது தங்கையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரால் இயல்பாக நடக்க முடியாது. நாங்கள் வறுமையில் உள்ளோம். எனவே, எனது தம்பி மற்றும் தங்கையின் படிப்புக்கு தொடர்ந்து உதவ வேண்டும். மேலும், தம்பி மற்றும் தங்கையின் எதிர்காலத்துக்கு உதவிட, எனக்கு வேலை வாய்ப்பு பெற்று தந்து ஆட்சியர் உதவி செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago