திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை விதக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க, பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. தொற்று பரவலை தடுக்கவும், மக்களின் நலன் கருதியும், விநாய கர் சதுர்த்தி பண்டிகை நாளான வரும் 10-ம் தேதி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தனி நபர்கள்,தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி என்பது தனி நபருக்கு மட்டுமே பொருந்தும். அமைப்புகளுக்கு பொருந்தாது. விநாயகர் சதுர்த்தியை, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பான முறையில்கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, கோயில்களின் வெளிபுறம் மற்றும் சுற்றுப்புறத்தில் வைக்கவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
விநாயகர் பண்டிகை பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள், தவறாமல் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago