கடலூர் புதுப்பாளையத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை மாநாடு நேற்று நடைபெற்றது.
கடலூர் புதுப்பாளையம் நகர குழு உறுப்பினர் ஆனந்த் தலைமை தாங்கினார். சந்திர குமார், சரவணன், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு கொடியை சாவித்திரி ஏற்றி வைத்தார். மாநில குழு உறுப்பினர் மாதவன் கலந்து கொண்டு பேசினார். நகர செயலாளர் அமர்நாத் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இதில் கிளை செயலாளர்களாக ரமேஷ், சரவணன், சந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன் பேசினார். இதில் புதைவட மின் திட்டத்தால் தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும்.புதுப்பாளையம் கோயில் இடத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும். திரவுபதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் மக்கள் கான்கிரீட் வீடு கட்ட அனுமதி அளிக்க வேண்டும்.
கடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக தொழிலா ளர்களை நிரந்தர படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசியை அந்த அந்த பகுதியில் போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த மாநாட்டில் குமரேசன் நினைவு தினம் முன்னிட்டு 50 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா பென்சில், ஸ்கேல், ரப்பர் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago