விழுப்புரம் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற அடையாளத்தை நீக்க ஆசிரியர் கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என நல்லாசி ரியர் விருது வழங்கும் விழாவில் ஆட்சியர் த.மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பாக 2020–2021-ம் கல்வி ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கும் விழா விழுப்புரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் மற்றும் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் விழுப்பு ரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுபெற்ற 9 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியது:
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறக்கப்பட்டசமயத்தில் சில அரசு பள்ளிகளில்கள ஆய்வு மேற்கொண்டேன். அப்போது மாணவ, மாணவி களிடம் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு வருவதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டேன். மாணவர்களில் பலர் ஆசிரியர்களையும், நண்பர்களையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தனர். மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்கள் மாணவர்கள் மீதும் வைத்திருக்கக்கூடிய அன்பையும், மரியாதையையும் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன்.
என் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஆசிரியர்கள் கல்வி மட்டுமன்றி நல்லொழுக்கத்தையும், சமூகத்திற்கு சேவை ஆற்றவேண்டும் என்ற உயர்ந்த பண்பையும் கற்று கொடுத்தனர். தரமான கல்வியை எனக்கு வழங்கி அதன் மூலம் என்னை மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் அளவிற்கு என்னை உயர்த்திய ஆசிரியர்களுக்கு என் வெற்றிகளை அர்ப்பணிக்கிறேன்.
மேலும் நம் மாவட்டத்தை அனைத்துத் துறைகளிலும் முதன் மையான மாவட்டமாக திகழ மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரு கிறது.
கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற அடைமொழியை நீக்குவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபாடவேண்டும். புதிய யுக்திகளை பயன்படுத்தி மாண வர்களின் அறிவு மற்றும் திறமையை மேம்படுத்தி அதன்மூலம் அவர்களை வெற்றியாளர்க ளாக சமூகத்திற்கு வழங்க பாடுபடுவோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago