சங்கராபுரத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் ஆய்வாளர் இளவழகி தலைமையிலான காவலர்கள் நேற்று சங்கராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் குற்றங்களை பற்றியும் அதற்குண்டான தண்டனைகளை பற்றியும் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது ஆய்வாளர் இளவழகி பேசும்போது, குழந்தைகளுக்கு தொடுதல் குறித்த வித்தியாசங்கள் குறித்தும், அதனை குழந்தைகள் எவ்வாறு கையாளவேண்டும். பெற்றோர்களிடம் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கும் முறைகளை பற்றியும் தெரிவித்தார். காவல்துறையினரிடம் பாலியல் சம்பந்தப்பட்ட புகாரை யார்வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கொடுக்க லாம்.
அவர்கள் ரகசியம் பாதுகாக் கப்படும். குழந்தைகளிடம் கைப் பேசியை அதிக நேரம் விளையாட அனுமதிக்க கூடாது. பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 1098 – ஐ தொடர்பு கொள்ளலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago