திருச்சி, அரியலூரில் 21 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது : அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினர்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள், அரியலூர் மாவட் டத்தைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் என 21 பேருக்கு மாநில அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நேற்று டாக்டர் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியர்) விருதை வழங்கினர்.

மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு திருச்சி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 13 பேருக்கு திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:

தியாக உணர்வு, மாணவர்களின் உயர்வுக்குப் பாடுபடுதல், தேர்ச்சி சதவீதம், மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, கரோனா காலத்திலும் மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதில் ஈடுபாடு என்பன உட்பட பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டுதான் விருதுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் களின் சிறந்த செயல்பாடுகளைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது.

பயிற்றுவிக்கும் பணியை ஈடுபாட்டுடன் செய்து வரும் ஆசிரியர்கள், சமுதாயம் என்ற மிகப் பெரிய கடலின் கரையில் உள்ள கலங்கரை விளக்கங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியிருக்கிறார்.

அதேபோல, மறைந்த முதல்வர் மு.கருணாநிதி, “அரசு என்ற தேரின் சக்கரங்கள் அரசு ஊழியர்கள் என்று சொன்னால், சமூகம் என்ற தேரின் புரவிகள் ஆசிரியர்கள்” என்று சொல்வார். அப்படிப்பட்ட பெருமையுடைய ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எஸ்.இனிகோ இருதயராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, மாவட்டக் கல்வி அலுவலர்கள், கோ.பாரதி விவேகானந்தன்(திருச்சி), சி.செல்வி(முசிறி), கூ.சண்முகம் (லால்குடி), பெ.ஜெகநாதன் (மணப்பாறை) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், கல்விப்பணியில் சிறப்பாக பணியாற்றும் கீழப்பழூ வூர் அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் க.மொழியரசி, திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியை தி.இன்பராணி, சின்ன வளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தி.பாண்டி யன், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் பி.அழகுதுரை, மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அ.அந்தோனி சாமி செழியன், அன்னிமங்கலம் ஆதிதிராவிடர் நலத் தொடக்க பள்ளி தலைமையாசிரியை ப.பிரபா, மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளி தலைமையாசிரியர் சிவமூர்த்தி, புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் ஆகிய 8 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, ரூ.10,000 பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து 3 மாற் றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் 19 பெண் களுக்கு இலவச தையல் இயந்தி ரங்கள் என 22 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 46,300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னூலாப்தீன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், முதன்மைக் கல்வி அலுவலர் எம்.ராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்