திருவண்ணாமலையில் - வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம், மகாகவி பாரதியார் தமிழ் சங்கம் மற்றும் எக்ஸ்னோரா சார்பில் முப்பெரும் விழா தி.மலையில் நேற்று நடைபெற்றது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா மற்றும் அன்னை தெரசா நினைவு நாள் என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு தமிழ் சங்க நிறுவன தலைவர் இந்திரராஜன் தலைமை வகித்து வ.உ.சி உருவப் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

ராதாகிருஷ்ணன் படத்தை துணைத் தலைவர் பாவலர் குப்பன் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

வ.உ.சி., பெயரில் விருது மற்றும் சிலை திறக்க ஆணை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக தமிழ் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

ஜவுளித் துறை முன்னாள் உதவி இயக்குநர் நாதன், மாவட்ட தமிழ் சங்க நெறியாளர் வாசுதேவன், சக்தி எக்ஸ்னோரா தலைவி லதா உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், மாவட்ட எக்ஸ்னோரா பொதுச் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

சலவை தொழிலாளர்கள்...

சலவை தொழிலாளர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா திருவண்ணாமலை சலவை துறை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

தலைவர் த.ம.பிரகாஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மூர்த்தி, ரங்கநாதன், செல்வகுமார், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வ.உ.சிதம்பரனார் உருவப் படத்தை திறந்து வைத்து, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து ஓவியர் பல்லவன் சிறப்புரையாற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்