வேலூரில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 121 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
மத்திய தேர்வாணையம் சார்பில் (யுபிஎஸ்சி) தொழிலாளர்கள் வைப்பு நிதி அமைப்பில் காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக அப்போது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் செப் டம்பர் 5-ம் தேதி (நேற்று) யுபிஎஸ்சி தேர்வு நடைபெறும் என மத்திய தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இதில், 121 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வையொட்டி ஊரீசு மேல்நிலைப்பள்ளியில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேர்வாளர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
மின்னணு பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இத் தேர்வினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago