ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் - 21 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது :

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும்இந்தாண்டு 385 ஆசிரியர்கள் டாக்டர் ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி ரத்தினசபாபதி-தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சித்தோடு, சந்திரசேகரன்-அரசு உயர்நிலைப்பள்ளி, குட்டிபாளையம், மணிகண்டன்-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மொடக்குறிச்சி, பாலகிருஷ்ணன்-அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பவானி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் சேட்டு மதார்சா-ஈ.கே.எம். அப்துல் கனி மதரசா இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி ஈரோடு, கல்யாணி-தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறு களஞ்சி, நம்பிக்கை மேரி-தலைமையாசிரியை ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி காடக நல்லி, சுமதி-ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி ஏழூர், ரஞ்சித் குமார்-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குருவரெட்டியூர், தீபலட்சுமி- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அவ்வையார் பாளையம், ரவிக்குமார்- கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெருந்துறை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் புதுமையான கற்பித்தல், கல்விக்கான செயலிகள் வடிவமைத்தல், பள்ளிகளில் சுற்றுச்சூழல் மேம்படுத்துதல், மாணவர் சேர்க்கையை உயர்த்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது, என மாவட்ட பள்ளிக் கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

இதுபோல் நாமக்கல்மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள்மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்று (5-ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளார், என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்