நைனாமலை அடிவாரத்தில் 8 ஆயிரம் பனை விதைகள் நடவு : மண் சரிவைத் தடுக்க வனத்துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

மண்சரிவைத் தடுக்க நைனாமலை அடிவாரத்தில் 8 ஆயிரம் பனை விதைகளை நடும் பணியில் நாமக்கல் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சேந்தமங்கலம் - புதன்சந்தை செல்லும் சாலையில் பிரசித்தி பெற்ற நைனாமலை கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரப் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் மண் சரிவைத் தடுக்க பனை மர விதைகளை நட வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதன்படி நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின்படி நேற்று நாமக்கல் வனச்சரகத்தினர் 8 ஆயிரம் பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

ஓரிரு தினங்களில் அனைத்து பனை விதைகளும் நைனாமலைஅடிவாரத்தில் நட்டு முடிக்கப்படும், என வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையினரின் இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்