நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த கறவை மாடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது, என அதன் தலைவர் என்.அகிலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஊரக இளைஞர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி திட்டத்தின் கீழ் வரும் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ஒருங்கிணைந்த கறவை மாடு வளர்ப்பு என்ற தலைப்பில் 6 நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
கறவைமாடு இனங்கள் மற்றும் தேர்வு செய்யும் முறைகள், கால்நடை பராமரிப்பு, தீவன மேலாண்மை, ஊறுகாய் புல் மற்றும் குறைந்த செலவில் அடர்தீவனம் தயாரித்தலின் செயல்விளக்கம், பண்ணை அமைக்கும் முறைகள், தூய்மையான பால் உற்பத்தி, பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரித்தல், நோய் மேலாண்மை, பண்ணை பொருளாதாரம், இன்சூரன்ஸ் மற்றும் கடன் வசதி போன்றவை குறித்து தொழில்நுட்ப உரை வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266650 ஆகிய தொலைபேசி எண் மூலமாகவோ பெயர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago