அரியலூரில் மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 3 ஆனது.
கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், செப்.1-ம் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அரியலூரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அரியலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், கடந்த 2-ம் தேதி கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளியான நிலையில், அந்த மாண விக்கும் கரோனா தொற்று இருப்பது தெரி யவந்தது. இதையடுத்து அந்த மாணவி, அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அரியலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண் ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 2 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முதல் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரு பள்ளிகளிலும் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் கீதாராணி உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
இதேபோல, கடந்த 1-ம் தேதி தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், அன்று கல்லூரிக்கு வந்த 914 மாணவிகள், 24 பேராசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இளநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
செப்.1, 2-ம் தேதிகளில் இந்த மாணவி வகுப்புக்கு வந்திருந்ததால், அவரது வகுப்பைச் சேர்ந்த மற்ற மாணவிகளுக்கு நாளை(செப்.6) மீண்டும் கரோனா பரிசோதனை செய்ய திட்ட மிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago