வீரளூர் கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா - ஊட்டச்சத்து உணவுகள் உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி ‘ஆரோக்கிய மான வாழ்வை நோக்கி ஒருங்கி ணைந்த பயணம்’ என்ற விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று நடைபெற்றது.

வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நெ.சரண்யா முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பா.கந்தன் தலைமை வகித்துப் பேசும்போது, “போஷன் அபியான் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி ‘ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்’ என்ற தலைப்பில் விழா நடைபெறுகிறது. அங்கன்வாடி மையங்களில் எடை மற்றும் உயரம் குறைவாக உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவது, கர்ப்ப காலங்களில் தாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.

மேலும், வளர் இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஊட்டச் சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும். கரோனா தொற்றில் இருந்து மக்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள, ஊட்டச்சத்து முக்கிய பங்காற்று கிறது. ஊட்டச்சத்து உள்ள உணவு களை உட்கொண்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதன்மூலம் தொற்றிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காத்துக் கொள்ள லாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நமது வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்வது அனை வரின் கடமையாகும். மேலும், கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது அனைவரது கடமையாகும்” என்றார்.

விழாவில், பெண் குழந்தை களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்து நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற வளரிளம் பெண்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை மாவட்ட திட்ட அலுவலர் பா.கந்தன் வழங்கிப் பாராட்டினார்.

இதையடுத்து, ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மேற்பார்வையாளர்கள் ரேணுகா, வாசுகி, திட்ட ஒருங்கிணைப் பாளர்கள் பிரபு, எழிலரசன், அங்கன்வாடி பணியாளர் பரிமளா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்