கிருஷ்ணகிரியில் போலீஸாருக்கு கொட்டும்மழையில் பேரிடர் மீட்புப் பயிற்சி :

By செய்திப்பிரிவு

சென்னை மருதம் கமாண்டோ பயிற்சி மையத்தைச் சேர்ந்த கமாண்டோக்கள் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக போலீஸார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு பேரிடரில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றுவது குறித்த ‘பேரிடர் மீட்புப் பயிற்சி’ அளித்து வருகின்றனர். நேற்று காலை கிருஷ்ணகிரி அவதானப்பட்டி, சிறுவர் பூங்கா படகு இல்லத்தில், ஆயுதப்படை, போலீஸார் மற்றும் தீயணைப்பு படை உள்ளிட்ட துறையைச் சேர்ந்த, 60 பேருக்கு ‘பேரிடர் மீட்புப் பயிற்சி’ அளித்தனர். மழைநீர், வெள்ளத்தில் சிக்கியோரை படகில் சென்று மீட்பது குறித்த செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை கொட்டும் மழையில் போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி சுப்ரமணி தலைமை வகித்தார். ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி மற்றும் கமாண்டோக்கள், போலீஸார் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE