- 70 பட்டாசு ஆலைகளின்உரிமங்கள் தற்காலிக ரத்து :

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களைக் கண்டறியவும், விபத்துகளைத் தடுக்கவும் அதிகாரிகள் கொண்ட 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து வருகின்றன. சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், ராஜபாளையம், வில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய வட்டங்களில் 758 பட்டாசு ஆலைகளில் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் தற்போது வரை ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், விதிமீறல்களில் ஈடுபட்ட 70 தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு அவை மூடப்பட்டன. மேலும் இந்த ஆலைகள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் 6 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்