தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜி.விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 11-ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதில் மோட்டார் வாகன விபத்து, இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவை வழக்குகள், சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, கல்விக்கடன், வங்கிக்கடன் சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை, காசோலை, நுகர்வோர், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக பங்கேற்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமாதானமாகவும், விரைந்தும் முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago