சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சரத்குமார் (30). இவர் நேற்று ஒக்கூர் சந்தைக்கடை வளாகத்தில் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அருகே காலி மதுபாட்டில்களும் கிடந்தன. தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
நேற்றுமுன்தினம் இரவு நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே சரத்குமாரை வெட்டிக் கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, இக்கொலை தொடர்பாக ஒக்கூர் அண்ணாநகர் சி காலனியைச் சேர்ந்த கேசவன் (30), பி காலனியைச் சேர்ந்த ருத்திரன் (20) ஆகியோர் மதகுபட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தனர். போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago