சிலம்பம் போட்டியில் வென்றோருக்கு பரிசு :

சிங்கப்பூர் இந்தியன் அசோசியேசன் இன்டர்நேஷனல், மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ், தேவராட்டம் சிலம்பம், இந்தியன் சிலம்பம் பள்ளி ஆகியவை இணைந்து சிலம்பம் போட்டி நடத்தியது.

பரிசளிப்பு விழா மதுரை கேகே.நகரிலுள்ள ஏஆர் பார்க்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாநகர் தல்லாகுளம் உதவி ஆணையர் சூரக்குமார், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர், செயலாளர் தவமணி கிறிஸ்டோபர் பங்கேற்றனர். சிறப்பாக சிலம்பம் விளையாடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர்.

சிலம்ப பயிற்சியாளர்கள் எஸ்எம். மணி, முத்துமாரி ஷிஜோ சரவணன், ஷேக் அப்துல்லாஹ் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE