குமாரபாளையம் நகராட்சியில் ரூ.2 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது, என நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
குமாரபாளையம் நகராட்சி சாலை பாதுகாப்பு பணிக்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வாரச்சந்தை முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலை , ஐயன் தோட்டம் சாலை, அம்மா உணவகம் சாலை ஆகிய 3 சாலைகளும் புதிய தார் சாலையாக மாற்றப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறப்பட்டு, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்.ஈ.டி. விளக்குகள் டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு 129 விளக்குகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago