திருச்செங்கோடு கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர கால்நடை மருத்துவரை நியமிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் கால் நடை மருத்துவமனை அமைந் துள்ளது. இங்கு முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் என மூவர் பணிபுரிந்து வருகின்றனர். எனினும், கால்நடை மருத்துவர் இல்லாததால் கால்நடைகளுக்குத் தேவையான சிக்கலான சிகிச்சைகளுக்கு நாமக்கல் கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு வந்து செல்லும் நிலை உள்ளதாக திருச்செங்கோடு மக்கள் தெரிவிக்கின்றர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறியதாவது:
திருச்செங்கோடு சுற்று வட்டார கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப் படுகின்றன. கால்நடைகளின் சிகிச்சைக்காக அவை திருச்செங்கோடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வழக்கம்.
எனினும், அங்கு நிரந்தர மருத்துவர் இல்லாததால் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு நாமக்கல் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதில் பல்வேறு சிரமங்கள் நிலவுகின்றன. திருச்செங்கோடு கால்நடை மருத்துவமனையில் ஸ்கேன் செய்யும் வசதி, அறுவை சிகிச்சை வசதி என பல்வேறு வசதிகள் உள்ளன. எனினும், மருத்துவர் இல்லாததால் இவற்றை பயன்படுத்த முடிவதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் திருச்செங்கோடு கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago