திருவெறும்பூரில் உள்ள பெல் ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி திருவெறும்பூர் பெல் ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரதாப்சிங் பிருலி. பெல் நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 6 பவுன் நகைகள், விலை உயர்ந்த செல்போன் ஆகியவை திருடப்பட்டிருந்தன.
இதேபோல, பெல் ஊழியர் லியோ, பணி முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 2 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து இருவரும் தனித் தனியே அளித்த புகார்களின் பேரில் பெல் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago