ரங்கத்திலிருந்து வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு செல்வதற்காக கொள்ளிடக்கரை சாலையை சீரமைக்க ரூ.3.10 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ரங்கம் மேலூர் அருகே உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா வுக்கும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். இவர்களின் வசதிக்காக ரங்கத்திலிருந்து மேலூர் வழி யாக செல்லக்கூடிய பிரதான அணுகு சாலை கடந்த 2 ஆண்டு களுக்கு முன் ரூ.1.70 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து முக்கொம்பி லிருந்து காவிரி ஆற்றின் கரையி லேயே வண்ணத்துப்பூச்சி பூங்கா வுக்குச் செல்லும் வகையில் சுமார் 7 கி.மீ தொலைவுக்கு ரூ.20 கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருவானைக் காவல் கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து ரங்கம் யாத்ரி நிவாஸ் வழியாக வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்குச் செல்லக்கூடிய கொள்ளிடம் ஆற்றின் வலதுபுற சாலையையும் சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து அறிந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளூர் திட்டக் குழும நிதியிலிருந்து இச்சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதன்பேரில் வடக்கு வாசலிலிருந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா வரையிலான சுமார் 6.5 கி.மீ தொலைவுள்ள சாலையை சீரமைக்க ரூ.3.10 கோடியை ஒதுக்கீடு செய்து அரசு உத்தர விட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் சு.சிவராசு கூறும்போது, ‘‘வண்ணத் துப் பூச்சி பூங்கா மேம்பாட்டு பணிகளின், ஒருபகுதியாக இச்சாலை சீரமைக்கப்படுகிறது. நிதி ஒதுக்கீட்டுக்கான அரசாணை வந்துவிட்ட நிலையில், விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago